Saturday, December 16, 2006

தடயம் - அத்தியாயம் - 2

சந்தானம் செல்வம் பக்கம் திரும்பி, "செல்வம், இது தேவராஜ் இல்லை, இது வேறயாரோ, தேவராஜ் எங்க?" என்றார்.
"சார், இது தேவராஜ் இல்லைங்கரது எனக்குத் தெரியும், உங்களுக்கு யார், என்ன தகவல் கொடுத்து நீங்க இங்க வந்தீங்க?"
சந்தானம் சற்று தயங்கி விட்டு, "அப்பரம் சொல்றேன், முதல்ல உங்களோட அடுத்த மூவ் என்ன?"
"சாரி சார், நீங்க என் ஜூரிஸ்டிக்ஷ்ன் இல்லை, இப்ப யுனிஃபார்ம்லயும் இல்லை இத வெச்சு பார்க்கும் போது நீங்க அஃபிஷியலா இங்க வரலைன்னு நான் முடிவு பண்ணிக்கலாமா?"
சந்தானத்துக்கு கோபம் தலைக்கேறியது, "நான்சென்ஸ், நான் யுனிஃபார்ம்-ல இல்லாத வெச்சு எங்கிட்ட எதையும் மறைக்காதீங்க, நான் உங்க ஜூரிஸ்டிக்ஷ்ன் இல்லைதான், ஆனா as a Commissioner of Police, I have every right to ask an SI about the progress of a murder case he is investigating, do you understand that", என்ற அவருடைய பேச்சிலும், தோரணையிலும் மிடுக்கும், செல்வம், இரண்டு வருடம் முன்பு அவரிடம் பணியாற்றிய போது இருந்த முனைப்பும் தெளிவாகத் தெரிந்தது.
உடனே செல்வம், "சாரி சார், நீங்க இங்க திடீர்னு வந்து நீங்க தேவராஜோட தாய்மாமன்னு சொன்னதும் நீங்க தேவராஜுக்கு உதவி செய்யதான் வந்திருக்கீங்கன்னு நினைச்சேன், உங்களுக்கு இந்த வீட்டில கொலை செய்யப்பட்டு கிடக்கரது அவர் இல்லைங்கர விஷயமே தெரியலைன்னதும், எதுக்கும் உங்களோட இன்டென்ஷன் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு ட்ரை பண்ணினேன். But, as a SI, I know my limits and I have every right to suspect anyone on a murder case even if that person is my senior officer."
சந்தானம் சற்று நிதானமாகி, "I appreciate your sincerity and dedication to your duty. உங்களுடைய நெக்ஸ்ட் மூவ் என்ன சொல்லுங்க?"
"சொல்றேன் சார் அதுக்கு முன்னால நீங்க எதை வெச்சு இங்க வந்தீங்க, உங்களுக்கு யார் தகவல் கொடுத்தாங்க?"
"எனக்கு ஒரு 4 மணி நேரம் முன்னாடி ஒரு ஃபோன் வந்தது, பேசினவங்க தேவராஜ யாரோ கொலை பண்ணிட்டாங்க இங்க ஒரே களேபரமா இருக்குன்னு சொன்னாங்க, நான் அதனால உடனே கிளம்பி வந்தேன்."
"ஃபோன் பண்ணினது ஆணா? பெண்ணா?"
"ஆண்தான்"
"உங்க செல்லுக்கு ஃபோன் பண்ணினாங்களா இல்லை வீட்டுக்கு பண்ணினாங்களா?"
"வீட்டுக்குத்தான்"
"அவங்க எத்தனை மணிக்கு ஃபோன் பண்ணினாங்க"
"ராத்திரி ஒரு 1 - 1:30 மணி இருக்கும்"
"ஆச்சர்யமா இருக்கு சார், எங்களுக்கு ஃபோன் வந்ததே ஒரு 1 மணி நேரம் முன்னாடிதான், அதுவும் இந்த வீட்டுல ஏதோ ப்ராப்ளம், களேபரமா இருக்குன்னு எதிர் வீட்லருந்து பஞ்சாபகேசன்கரவர் ஃபோன் பண்ணினார். உங்களுக்கு 7 மணி நேரம் முன்னாடியே ஃபோன் வந்துடுச்சுன்னா இதுல ஏதோ மர்மம் இருக்கு, பட் நோ ப்ராப்ளம், உங்க வீட்டுக்கு வந்த call-ஐ trace பண்ணிடலாம்"
"அதுக்கு அவசியம் இல்லை, என் வீட்டுல Caller Id facility இருக்கு, அதனால அந்த நம்பரை வாங்கித் தரேன், நீங்க நேரா அட்ரஸையே ட்ரேஸ் பண்ணிடலாம்."
சந்தானம் தன் செல் ஃபோனை எடுத்து வீட்டிற்கு கால் செய்து பேசினார், பேசும் போது ஒரு சிறிய பேப்பரை எடுத்து எதையோ எழுதினார், பிறகு, "செல்வம் இது தான் அந்த நம்பர் ட்ரேஸ் பண்ணிடுங்க. இப்ப சொல்லுங்க உங்க நெக்ஸ்ட் மூவ் என்ன?"
"சார், தேவராஜ தேடிகிட்டு இருக்கோம், மாணிக்கத்த விசாரிச்சா ஏதாவது க்ளூ கிடைக்கும்னு நினைக்கிறேன். இங்க நடந்திருக்கரத பாக்கரப்ப, தேவராஜ் இந்த ஆள கொலை பண்ணிட்டு ஓடிப் போயிருக்கலாம். சூழ்நிலை அப்படித்தான் இருக்கு".
"செல்வம், தேவராஜ் என்னோட ரிலேடிவ்தான், ஆனா உங்களுக்கு நல்லாத் தெரியும் எனக்கும் டியூடிதான் முக்கியம், அவன் இந்த கொலையை செய்து இருந்தா அவனை சட்டத்து முன் கொண்டு வந்து கண்டிப்பா நான் தண்டனை வாங்கித்தருவேன். ஆனா, அதே சமயம் இந்த நிமிஷம் இங்க செத்து கிடக்கரது தேவராஜ் இல்லைங்கரதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க முதல்ல இவன் யாரு, என்னன்னு விசாரிங்க".
"சார் இவன் ராயபுரம் ரௌடி பாஸ்கரோட வலது கை, பேரு பைக் குமார்".
"இவனா பைக் குமார்!, இவன் மேல 4 கொலைக் கேசு இருக்கே! இவன் எப்படி இங்க வந்தான், இவனுக்கும் தேவராஜுக்கும் என்ன கனெக்ஷன்?"
"அத விசாரிச்சுகிட்டு இருக்கோம்"
"செல்வம், நான் இந்த கேஸ்ல நேரடியா இறங்கலாம்னு நினைக்கறேன். உங்களுக்கு அதனால ஒன்னும் கோபம் வராதே?".
"ஏன், என் இன்வெஸ்டிகேஷன் மேல நம்பிக்கை இல்லையா?"
"அப்படி இல்லை, நான் நேரடியா இறங்கினா, தேவராஜ ஒருவேளை இந்த கொலையைப் பண்ணிட்டு தலை மறைவா இருந்தா, அவன் எப்படி யோசிப்பான்னு, எங்க போவான்னு என்னால கணிக்க முடியும்."
செல்வம், ஒரு புன் சிரிப்புடன், "நீங்க எதுக்கும் என் அதிகாரி துணைக் கமிஷ்னர் துரைராஜன் கிட்ட பேசிடுங்க"
"துரை எதுக்கு, நான் ஐ.ஜி. தேவசகாயத்துக்கிட்டயே பேசிடறேன்" என்ற சந்தானம் தன் செல் ஃபோனில் யாருக்கோ கால் செய்து பேசத் துவங்கினார், பேசிவிட்டு, "செல்வம், I.G. கிட்ட பேசிட்டேன், இந்த கேஸுக்கு என்னை ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணி ஆர்டரை, உங்க கமிஷ்னர் துரைராஜனுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணிட்டார், இனி இந்த கேஸ்ல நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ணப் போறோம்."
அப்போது செல்வத்துக்கு அவருடைய செல்ஃபோனில் ஒரு கால் வந்தது, அதைப் பார்த்து விட்டு, "கமிஷ்னர் துரைராஜன் வீட்ல இருந்து கால்" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளிப் போய் பேசினார்.
"சார், கமிஷ்னர், நீங்க சொன்னதைத்தான் சொன்னார், அவருக்கு நம்ப மூவ்மெண்ட்ஸ் பத்திய தகவல்களைஅடிக்கடி தெரியப் படுத்தச் சொன்னார். இப்ப நீங்க சொல்லுங்க அடுத்து என்ன பண்ணலாம்னு"
"மாணிக்கத்தையும், அவரோட பையனையும் சந்தேகக் கேஸ்ல புக் பண்ணி ஸ்டேஷன்ல வைங்க, அப்ரம் அவங்கள விசாரிக்கலாம், உள்ள இருக்கர பாடிய ஃபோட்டோ எடுக்கரதுக்கு ஏற்பாடு பண்ணுங்க, ஃபாரன்ஸிக் ஆளுங்கள வரச் சொல்லுங்க, பாடிய போஸ்ட்மார்டம் பண்ண ஏற்பாடு பண்ணுங்க, அக்கம் பக்கத்துல சந்தேகப் படற மாதிரி யார் இருந்தாலும் புடிச்சு உள்ள போடுங்க, எதிர் வீடு, பக்கத்து வீடுன்னு வீடு வீடா போய் விசாரணை பண்ண ஏற்பாடு பண்ணுங்க ", என சர சரவென உத்தரவு போட்டுவிட்டு திரும்பியவர் கண்ணில் அது பட்டது.
"செல்வம், அதப் பாருங்க!"
அதைப் பார்த்த செல்வம், அதிர்ந்து போய் நின்றார்.

(தொடரும்)

3 comments:

நாகு (Nagu) said...

கதை விறுவிறுப்பாக போகிறது. மிக அருமையான கொலைக்கதைக்கேற்ற நடை. வாழ்த்துக்கள்.

பாத்திரங்களின் பேச்சில் ஆங்கிலம் இருப்பதை தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாது. ஆனால் உங்கள் விவரிப்பில் ஆங்கிலம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்(அவருடைய செல்ஃபோனில் ஒரு கால் வந்தது...)

Thamizh_Thendral said...

வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆங்கிலம் இருப்பதை தவிர்க்கச்சொல்லி இருகின்றீர்கள். கதையின் போக்கு, கதை சொல்லும் நடை இவைகளை அது ரொம்பவும் தடை செய்யும் என்பதால் அதை நான் முயற்சிப்பதாகக்கூட இல்லை. மேலும் கதை என்பது பல கதாபாத்திரங்களின் பலவித குணாதிசயங்களை வெளிக்காட்டும் ஒரு முயற்சியே. அதை தமிழில் மட்டுமே சொல்ல முனைந்தால், அது ஒரு கட்டுரை போல மாறும் அபாயம் இருப்பதாலும் என் எழுத்து சுதந்திரம் தடைபடும் என்பதாலும் அதை நான் பின்பற்றுவதாக இல்லை, மன்னிக்கவும்.

-முரளி.

நாகு (Nagu) said...

Point well taken. உங்கள் நடையை மாற்றவேண்டாம். மிக நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.