Thursday, May 17, 2007

சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி

முதலில் உங்கள் வீட்டில் சன் டிவி இணைப்பு இல்லையா! ஜோராக ஒரு முறை கை தட்டி விட்டு விலகி விடுங்கள்- பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும்.

தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா
என்று இருங்கள். அதுவும் முடியாதவர்கள் கீழ்கண்ட சில விதிகளை பின் பற்றினால் சன் டிவியின் சகிக்காத தொடர்களை ரசிப்பதோடு, வாழ்வில் அல்சர், இரத்த கொதிப்பு போன்ற வியாதி இனி வாராது அந்த சூரிய பகவான் அருள் புரிவார்.

முக்கிய விதி:
எல்லா தொடரிலும் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும், கீ கொடுத்தால் ஓடும் கை கடிகாரத்திற்கு எவ்வளவு மூளை உண்டோ, அவ்வளவு மூளைதான் அவர்களுக்கும்.
இனி உப விதிகள்:

1. எந்த தொடரும் இப்போது முடியும் என எப்போதும் சொல்ல முடியாது, எனவே, தொடர் இப்படி முடியுமா, அப்படி முடியுமா என மண்டை குழம்புவது ஒரு கால விரயம்.
2. எல்லா தொடரிலும் ஒரு வில்லன் (அ) வில்லி உண்டு, அவர்கள் கொஞ்சம் கோணல் சிரிப்பு சிரித்தபடி கடித்து கடித்து வசனம் பேசுவார்கள், சீனுக்கு சீன் உதார் விடுவார்கள்.
3. எல்லா தொடரிலும் ஒரு ஏழை அப்பா (அ) அம்மா நிச்சயம் உண்டு, அவர்கள் எப்போதும் அழுதபடியே இருப்பார்கள்.
4. எல்லா தொடரிலும் நன்கு படித்த, பணக்கார பெண்ணும், வாசக்கதவை மூடி, டெலிஃபோனை பிடுங்கி விட்டால், வெளியே போகத்தெரியாமல் பூனை மாதிரி வீட்டிலேயே இருப்பாள்.
5. எல்லா தொடரிலும், யாராவது ஒருவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கும்.
6. எல்லா கதாநாயகனுக்கும் ஒரு கெட்ட Flashback கட்டாயம் இருக்கும்.
7. எல்லா தொடரிலும் ஒன்று (அ) இரண்டு கதாபாத்திரங்கள் ரொம்ப நல்லவர்கள், ஆனால் எப்போதாவதுதான் வருவார்கள்.
8. ஒரு தொடரில் வரும் நடிகர், நடிகைகள் எல்லா தொடர்களிலும் வருவார்கள், so, ஒரே தொடரை தொடர்ந்து பார்க்காமல், ஒரு நாளைக்கு ஒன்று என்று பார்த்தாலும் புரியும்.
9. எல்லா மாயாஜால தொடர்களிலும், சமீபத்திய எல்லா ஆங்கிலப்பட ட்ரிக் கண்டிப்பாக இருக்கும்.
10. அம்மன், முருகன் தொடர்களை பார்ப்பதை தவிர்க்கவும், பார்த்தால், கொஞ்சம் இருக்கும் கடவுள் பக்தியும் போய், நாஸ்திகராவது சர்வ நிச்சயம்.
11. நியூஸ் - நடு நடுவே வரும் கேள்வி - பதில் மட்டும் OK, so, mute செய்து விடுவது உத்தமம்.
12. Pepsi - தொடரை ரசிக்க, பாடல்காட்சி வரும் வரை mute செய்து விடுவது ரொம்ப நல்லது, செய்தால், கேட்கப்படும் அபத்த கேள்விகளை கேட்டு எதையாவது எடுத்து டிவி மேல் வீசலாம் என்ற கோபம் வராது தவிர்க்கலாம், டிவி ரிப்பேர் செலவும் மிச்சம் பிடிக்கலாம்.
13. அரட்டை அரங்கம் - தவிர்ப்பது நல்லது, கொஞ்சம் இருக்கும், மூளையும் மழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது, இந்தியா பற்றி நமக்கு இருக்கும் பொது அறிவு பெரிய கேள்விக்குறியாகிவிடும். மேலும், பார்த்த பின் ஒரு வாரம் வரை - காதில் 'ஒய்ங்க்' என்று ஒரே இரைச்சலாக இருக்கும். எதற்காக எல்லோரும் கத்தி கத்தி பேசுகிறார்கள்?
14. உங்களோடு உங்கள் குழந்தைகளும் தொடர்களை பார்க்கின்றார்களா, தினமும் பார்க்கின்ற ஒவ்வொரு தொடருக்கும், $1.00 வீதம் உண்டியலில் போட்டு வந்தால், பிற்காலத்தில் அவர்கள் பிழைக்க ஒரு பொட்டிக்கடை வைக்க பணம் தயார்.

-முரளி

5 comments:

Anonymous said...

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்

;)

Anonymous said...

www.isaitamil.net site giving free suntv, ktv

You can connect your laptop to TV and watch Suntv live.

மணிகண்டன் said...

//தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா என்று இருங்கள்.//

அப்படி போட்டாலும் மாசாமாசம் 25$ கட்ட வேண்டியிருக்கே அந்த பாழப்போன காண்ட்ராக்டால.

Thamizh_Thendral said...

ப்ரியா, மணிகண்டன் மற்றும் அனானி,

கருத்துக்களுக்கு நன்றி. வேலை பளு காரணமாக பல நாட்களாக இங்கு வராமல் இருந்து விட்டேன். அதனால் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் தருவதில் சற்று கால தாமதமாகி விட்டது.

அனானி: இசைதமிழ் பற்றி சமீபத்தில் தெரிந்து கொண்டேன். அதில் பதிந்து வைத்திருக்கிறேன் நேரமின்மையால் மீண்டும் சென்று நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை.

மணிகண்டன்: $25 என்றால் கே.டி.வி சேர்த்தா, சரிதான்!

அன்புடன்,

முரளி.

நாஞ்சில் பிரதாப் said...

மெகா சீரியல் பற்றி நல்ல விமர்சனம்...தினமும் அதை பார்ப்பீர்கள் போலுள்ளது...
மெகா சீரியலில் கடுப்பேற்றும் ஒரு விசயம் எதுவென்றால்...அதில் வில்லன்களாக வரும் கத்துகுட்டி நடிகர்கள்...மற்றும் போலீசாக வருபவர்கள்...அலெக்ஸ் பாண்டியன் அளவுக்கு ஓவர் ஆக்டிங் கொடுப்பதை பார்த்தால் எங்கள் வீட்டு டிவி இன்னும் எத்தனை நாளுக்கு ஓடும் என்று தெரியவில்லை..அவ்வளவு வெறுப்பேற்றுகிறார்கள்.