Sunday, May 25, 2008

தடயம் - அத்தியாயம் - 11

அவரை கிட்டத்தில் பார்த்ததும் செல்வம் சற்று அதிர்ந்து போனார்.

"இது என்ன கனவா இல்லை நிஜமா? ஜார்ஜ் நீங்க எப்படி இங்க!" என்று இழுத்தார்.

"செல்வம், இது நிஜம்தான். துரை எனக்கு போன் பண்ணி நீங்க ஒரு என்கவுண்டர் பண்ணப் போறதாகவும், அதுக்கு என் உதவி வேணும்னும் சொன்னார். நான் உடனே, என் டீம் ஆளுங்கள கலெக்ட் பண்ணிட்டு அவர் சொன்ன மாதிரி அவங்க 8 பேரை ஹோட்டல் பார்க் ஷெரட்டான் அனுப்பிட்டு நான் இங்க வந்தேன். இதுக்கே இவ்வளவு ஆச்சரியப் படரீங்களே, என் கூட யார் வந்திருக்காங்க தெரியுமா?"

"யார் வந்திருக்காங்க?"

"பாரி சார் வந்திருக்கார்" என்று ஜார்ஜ் சொல்லும் போதே, காரின் பின் சீட்டிலிருந்து பாரி இறங்கினார்.

பாரி - இவர் எக்ஸ் கமாண்டோ, இவர் பிரதமரோட பூனைப் படையில சீனியர் செக்யூரிடி பிரிவில் இருந்தவர், தற்சமயம் ஸ்பெஷல் ட்யூடியா, தமிழ்நாட்டு போலீஸோட என்கவுண்டர் டீமுக்கு ட்ரைய்னிங் கொடுக்கரார். இவரைப் பத்தி தெரிஞ்சவங்க சொல்றது இவர் ரவுடிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் டெரர். இவரைப் பார்த்ததும் செல்வத்துக்கு பேச்சே வரவில்லை.

"என்ன செல்வம், ஒன்னும் பேச்சே இல்லை, நான் வந்தது பிடிக்கலையா?"

"பாரி சார், என்ன இப்படி கேக்கரீங்க, உங்க கூட வொர்க் பண்றது எவ்வளவு பெரிய சான்ஸ், அதை யோசிச்சு மலைச்சு போயிட்டேன். நீங்க எப்படி இங்க..."

"துரைகூட ஒரு மீட்டிங்ல இருந்தேன், அப்ப உங்க போன் வந்தது, நானும் ஜார்ஜ்கூட போய் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன், ஒரு 6 பேர ஜார்ஜோட ஆளுங்க கூட அனுப்பிட்டேன். இன்னொரு விஷயம், நீங்க யாருக்கோ வயர்லெஸ் மைக் செட் பண்ணனும்னு கேட்டீங்களாம், கொண்டு வந்திருக்கோம், பண்ணிடலாமா?"

"AC சந்தானத்தின் சர்ட் பட்டனில ஒன்னும் முடிஞ்சா அவருடைய ஷீவில ஒன்னும் வெக்கலாமா?"

"கண்டிப்பா. அவரை மீட் பண்ணலாமா?"

"வாங்க. அதுக்கு முன்னாடி நான் சொன்னதெல்லாம் கிடைச்சுதா"

"யெஸ் செல்வம்"

"குட், 8 மணிக்கு ஹோட்டல் பார்க் ஷெரட்டான் பின்னாடி நிக்கப் போற ஆட்டோவுல டிப்பார்ட்மெண்ட்ல இருந்து அருளும் AC சந்தானமும் போகப் போராங்க, அவங்க பாதுக்காப்புக்காகவும், அவங்க காப்பாத்த போற இன்னும் ரெண்டு பேருக்காகவும்தான் இந்த ஏற்பாடெல்லாம்."

"ஆட்டோவை ட்ரேஸ் பண்ணியாச்சா?"

"ஆட்டோ நம்பர் TN - 09 - 7916 இதை ட்ரேஸ் பண்ணச் சொல்லியிருக்கேன், அதுல ஒரு ட்ராக்கிங் டிவைஸ் வெக்க சொல்லியிருக்கேன். அது விவரம் இன்னும் ஒரு சில நிமிஷத்தில தெரிய வரும்."

"ட்ராக்கிங் வேன் நாங்க இங்க கிளம்பி வரும்போதே கிளம்பியாச்சு"

"எஸ், இப்பதான் எனக்கும் தகவல் வந்துச்சு, ட்ராக்கிங் வேனை ஹோட்டல் பக்கத்தில நிக்க வெச்சாச்சு. சந்தானம் சார், மைக் வெச்சுட்டு டெஸ்ட் பண்ணி பாக்கனும்னு சொல்வாரு, அதுக்கு ஆயத்தமா வந்திருக்கீங்களா"

"எஸ்"

"குட், நாம மூனு பேரும் உள்ள போய் மைக் செட் பண்ணுவோம், மத்தவங்க இங்கயே இருக்கட்டும். நாம மைக் செட் பண்ணிட்டு வந்ததும் கிளம்பனும் "

"வாங்க செல்வம்" என்ற சந்தானம், செல்வத்துடன் வந்த ஜார்ஜையும் பாரியையும் பார்த்தவுடன் அவருடைய ஆச்சர்யத்தை அடக்க முடியாமல், "வாவ், ஜார்ஜ், பாரி என்னது இது பெரிய யுத்ததுக்கே தயாராகிட்டீங்க போல இருக்கு! செல்வம் இவங்கள எப்படி டீம்ல சேர்த்தீங்க?"

"சார், நான் இவங்களை டீம்ல சேர்க்க ரொம்ப மெனக்கெடலை. துரை தான் இந்த ஏற்பாடெல்லாம் செய்தது. கவலையே படாதீங்க தேவராஜையும் அருளோட மகள் ஸ்ரீநிதியையும் பத்திரமா கொண்டு வந்திடலாம். உங்களுக்குததான் தெரியுமே, பாரி எலக்ட்ரானிக்ஸ் விஷயத்திலயும் எக்ஸ்பர்ட்ன்னு, இவர் வயர்லெஸ் மைக் செட் கொண்டு வந்திருக்கார். இப்போ உங்களுக்கு வயர்லெஸ் மைக் செட் பண்ணி டெஸ்ட் பண்ணிடுவார், அதுக்கப்பறம் நீங்க கிளம்பலாம்."

"குட், எனக்கு மைக் செட்டை ஷர்ட் பட்டனிலும், கால் ஷூவிலேயும் வெச்சுடுங்க. பாரி, வெப்பன்ஸ் ஏதாவது எடுத்துகிட்டு போக வழியிருக்கா?"

"ஷூர். ஒரு சின்ன கத்தி செட் இருக்கு அதை ஒரு ஷூக்கு அடிப்புறம் வெச்சிடலாம், அதை கண்டு பிடிக்கரது கஷ்டம், தேவைப் படரபோது பின்னங்காலை அழுத்தினா முன் பக்கம் கத்தி வரும் எதிராளியை எட்டி உதைச்சா ஒரு 6 இன்ச் அவனை பதம் பாத்திடும். ரொம்ப கூர்மையான கத்தி. திரும்பியும் பின்னங்காலை அழுத்தினா கத்தி உள்ள போயிடும். அதை நான் செட் பண்ணிடறேன்."

"அதை என் ஷீவில வெக்க முடியுமா?"

"நோ, அதுக்கு ஸ்பெஷல் ஷீ வேணும், உங்க ஷூ சைஸ் என்னன்னு சொல்லுங்க, என் ஜீப்ல இருக்கான்னு பாக்கரேன்."

"என் ஷீ சைஸ் 10"

"வெரிகுட். என் கிட்ட 10 நம்பர் ஷீ இருக்கு, அதுதான் என் ஷீ சைசும். நான் போய் ஜீப்ல இருந்து கொண்டு வர்றேன்".

"எக்ஸலண்ட், செல்வம், எனக்கு தேவராஜை ஒரு ஆபத்தும் இல்லாம கூட்டிகிட்டு வந்திடலாங்கர நம்பிக்கை வந்திடுச்சு."

"சார், நீங்க தைரியமா இருக்கரத பாக்கரப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதே சமயம் பைக் குமாரை கொலை செய்தது அந்த கும்பலா இல்லாம தேவராஜா இருந்தா, நாம தேவராஜ காப்பாத்தினாலும், நான் அவரை அரஸ்ட் பண்ண வேண்டியிருக்கும்."


"டாமிட், நான் கொஞ்சம் தைரியமா இருந்தா உங்களுக்கு பொறுக்காதே, உடனே இப்படி ஏதாவது டார்ச்சர் கொடுத்தாகனுமே" என்று சிடுசிடுத்தார்.

செல்வம் மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக சந்தானத்தை பார்த்தார்.

ஜார்ஜ், இந்த விவாதத்தில் செல்வம் சற்றும் சலனமில்லாமல் இருப்பதை சட்டென்று மனதிலேயே நோட் செய்து கொண்டு செல்வத்தைப் பார்த்து மெலிதாக புனனகைத்தார். அதற்கு செல்வம் கண்ணாலேயே ஏதோ சொல்ல அதை ஜார்ஜ் ஆமோதிக்கும் வகையில் முகத்தை வேறு பக்கம் திருப்புவது போல் தலையசைத்தார். இது சந்தானத்தின் பார்வையில் படவில்லை.

அப்போது பாரி உள்ளே வந்தபடியே, "சந்தானம் சார், இந்த ஷூவை ட்ரை பண்ணிப் பாருங்க, அப்படியே கொஞ்சம் கத்தியை வெளிய எடுக்க ப்ராக்டிஸ் பண்ணுங்க" என்றார்.

சந்தானம் ஷீவைப் போட்டு பார்த்து விட்டு, "எனக்கு சரியா இருக்கு, அந்த கத்தியை எடுத்து பார்க்கிறேன்" என்றபடி பாரி சொன்னது போல பின்னங்காலை அழுத்தி கத்தியை வெளி கொண்டு வந்து விட்டு, மறுபடி அழுத்தி கத்தியை உள்ளே மடக்கி, இதை மேலும் இரண்டு முறை செய்து பார்த்தார். பிறகு பாரியைப் பார்த்து, "பாரி, ப்யூட்டிபுல், இது ரொம்ப சரியா வரும் போல இருக்கு. நீங்க மைக் வெச்சுடுங்க, நாங்க கிளம்பர நேரமாயிடுச்சு" என்றார்.

பாரி சந்தானத்தின் சர்ட் பட்டனின் பின்புறம் ஒரு மைக்கும், ஷீவின் உள்புறம் ஒரு மைக்கும் வைத்தார். பின் கையில் இருந்த ஒரு வாக்கி டாக்கி மூலம் தனது உதவியாளரை அழைத்து ட்ராக்கிங் மற்றும் ரெகார்டிங் மெஷினை ஆன் செய்ய சொல்லி அதை டெஸ்ட் செய்ய சொன்னார், அவருடைய பதிலை கேட்டு பிறகு சந்தானத்தை பார்த்து,

"சந்தானம் சார், மைக் ரெண்டும் சரியா வேலை செய்கிறது. நீங்களும் அருளும் கிளம்பலாம், நாங்க எல்லாரும் முதல்ல கிளம்பி போயிடுவோம், ரெண்டு கான்ஸ்டபிள்ஸ்ஸ மஃப்டில இங்க தெரு முனையில நிக்க வெச்சுட்டு வந்திருக்கோம், அவங்க உங்க காரை யாருக்கும் தெரியாம தொடர்ந்து வருவாங்க, நடுவுல யாராவது உங்கள தாக்கவோ அல்லது வழி மறிக்கவோ ப்ளான் பண்ணினா அவங்க ரெண்டு பேரும் உங்களை காப்பத்துவாங்க"

"ரெண்டு பேர் எப்படி எங்களை காப்பாத்த முடியும்"

"அவங்க ரெண்டு பேரும் என்னோட டாப் ஸ்டூடண்ட்ஸ், அவங்க ரெண்டு பேர் சேர்ந்தா ஒரு 20-30 பேருக்கு சமம். அதோட அவங்க எது நடந்தாலும் எனக்கு தகவல் சொல்லிடுவாங்க, நான் ஒரு 3-4 நிமிஷத்தில அங்க வந்திடுவேன். இப்ப நாங்க கிளம்பரோம்" என்றபடி வெளியில் செல்ல ஆரம்பித்தார். அவர் செல்வதைப் பார்த்து விட்டு ஜார்ஜும் கிளம்பி சென்றார்.

செல்வம், சந்தானத்துக்கு விரைப்பாக ஒரு சல்யூட் அடித்து விட்டு, "சார் நாங்க அடுத்து உங்களை அவங்க இடத்திலதான் பார்ப்போம். நடுவில பார்த்தாலும் உங்களை கண்டுக்காமல் இருப்போம். நாங்க போலீஸ் ட்ரெஸில் வராமல் மஃப்டியில் வருவோம்" என்ற சொல்லிவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் ஜார்ஜ் மற்றும் பாரியுடன் சேர்ந்து கொண்டு வெளியில் சென்றார்.


(தொடரும்)

No comments: